வங்காளம் உட்பட 11 மொழி பேசும் மனித ரோபோ – முதல் பெண்மணிகள் மாநாட்டில் அறிமுகம் செய்தார் மெலனியா ட்ரம்ப்

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் நடை​பெற்ற முதல் பெண்​மணி​கள் மாநாட்டில், வங்​காள மொழி உட்பட 11 மொழிகள் பேசும் மனித ரோபோ அறி​முகம் செய்​யப்​பட்​டது. உலகளா​விய கூட்​ட​ணியை ஏற்​படுத்த 45 நாடு​களின் முதல் பெண்மணிகள் பங்​கேற்​கும் மாநாடு அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளி​கை​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில் ஃபிகர் என்ற அமெரிக்க ரோபோட்​டிக்ஸ் நிறு​வனம் உரு​வாக்​கிய மனித ரோபோ, வெள்ளை மாளி​கை​யின் முதல் ரோபோ விருந்​தாளி​யாக அறி​முகம் செய்​யப்​பட்​டது. இந்த ரோபோ, மாநாட்​டுக்கு தலைமை தாங்​கிய மெலனியா ட்ரம்ப்​புடன் இணைந்து வந்​தது.

‘ஃபிகர் 3’ என்று பெயரிடப்​பட்ட இந்த மனித ரோபோ, கூட்டத்​தில் பங்​கேற்ற வெளி​நாடு​களைச் சேர்ந்த முதல் பெண்​மணிகளை ஆங்​கிலம், ஸ்பேனிஷ், பிரெஞ்​சு, போர்ச்​சுகீஸ், அராபிக், ஜாப்​பனீஸ், ஹீப்​ரூ, ஸ்லோவேனி, உக்​ரேனியன், ஜார்​ஜியன் உட்பட 11 மொழிகளில் வரவேற்​றது.

அது வங்​காள மொழி​யில் ‘ஸ்​வாகதம்’ என கூறியது. இந்த மனித ரோபோ வீட்டு வேலைகளை செய்​வதற்​காக உரு​வாக்​கப்​பட்ட இயந்​திரம். இதில் கமராக்​கள் மற்​றும் உணர் கருவி​கள் பொருத்​தப்​பட்​டுள்​ளன. இந்​நிகழ்ச்​சி​யில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்​பின் மனைவி மெலனியா பேசிய​தாவது: என்​னுடன் இணைந்​ததற்​காக ‘ஃபிகர் 3’-க்கு நன்றி.

நீ தான் வெள்ளை மாளி​கைக்கு வந்த அமெரிக்​கா​வில் தயா​ரான முதல் மனித ரோபோ விருந்​தாளி. கற்​றலுக்​கான செயற்கை நுண்​ணறி​வின் பயன்​பாடு, மனித ரோபோ ஆசிரியர்​கள், அமெரிக்க பொருளா​தா​ரத்தை ஊக்குவிப்பதில் தொழில்​நுட்​பம் மற்​றும் கல்​வி​யின் பங்கு ஆகிய​வை​தான் அடுத்த தலை​முறையை உரு​வாக்​கும் 3 முக்​கிய தூண்​கள். செயற்கை நுண்​ணறி​வின் எதிர்​காலம் மனித உரு​வம் கொண்​டது.

அது மனித வடி​விலேயே அமை​யும். மிக விரை​வில், செயற்கை நுண்​ணறிவு நமது செல்போன்​களி​லிருந்து வெளி​யேறி, மக்​களு​டன் நேரடி​யாகத் தொடர்பு கொள்​ளக்​கூடிய மனித ரோபோக்​களாக மாறும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles