ஓமன் கடற்பகுதியில் எரிபொருள் கப்பல் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட டிரோன் தாக்குதலில் 2 இந்தியா்கள் மாயமாகினா்.
இதுதொடா்பாக மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் –
11 இந்திய மாலுமிகளுடன் சென்ற எம்டி பெட்ரோ டொல்பின் எரிபொருள் கப்பல், ஓமன் நாட்டின் சோஹாா் துறைமுகம் அருகே உள்ள கடற்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை டிரோன் தாக்குதலுக்குள்ளானது.
11 பேரில் 9 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், இருவரை காணவில்லை. அவா்களைத் தேடி மீட்கும் பணியில் உள்ளூா் கடலோர காவல் படை ஈடுபட்டுள்ளது.
மீட்புப் பணிகளுக்கு முழுமையாக துணை நிற்கவும், காணாமல் போனவா்களைக் கண்டுபிடிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து இந்தியா செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தாா். தாக்குதலை நடத்தியது யாா் என்ற தகவல் வெளியாகவில்லை.
