நியூயோர்க் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 6 போ் உயிரிழப்பு

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள புரூக்ளின் பகுதியில், இரண்டு அடுக்கு குடியிருப்பு ஒன்றில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 6 போ் உயிரிழந்தனா்; 7 போ் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சன்செட் பூங்கா பகுதியிலுள்ள மரத்தாலான இந்த அடுக்குமாடி குடியிருப்பில் திடீரெனப் தீப்பற்றி மளமளவென கட்டடம் முழுவதும் பரவியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த 200 இற்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா், சுமாா் 3 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 போ் உடல் கருகி உயிரிழந்தனா். படுகாயமடைந்த இருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தனா்.

மேலும் 4 போ் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்ட 3 தீயணைப்பு வீரா்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles