நியூஸிலாந்தின் கடற்கரையில் உயிரிழந்த 40இற்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள்

நியூஸிலாந்தின் வடக்குத் தீவில் உள்ள கடற்கரையில் 40இற்கும் மேற்பட்ட பைலட் திமிங்கிலங்கள் (Pilot Whales) ஒரே நேரத்தில் கரை ஒதுங்கி, பாறைகளில் மோதி உயிரிழந்த சம்பவம் கடல்சார் உயிரின ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்தின் வைராபரா பிராந்தியத்தில் அமைந்துள்ள Ngawi கடற்கரைப் பகுதியில், 40இற்க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கிலங்கள் கூட்டமாக கரையை நோக்கி வந்துள்ளன.

எதிர்பாராதவிதமாக, அங்குள்ள கூர்மையான மற்றும் கரடுமுரடான பாறைகளுக்கு இடையே அவை சிக்கிக்கொண்டதால், அலையின் வேகத்தில் பாறைகளில் மோதி உடலெங்கும் கடுமையான காயங்களுக்கு உள்ளாகின.

தகவல் அறிந்த கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகளும், ‘புராஜெக்ட் ஜோனா’ (Project Jonah) அமைப்பின் தன்னார்வ மருத்துவக் குழுவினரும், அப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மாஓரி பழங்குடியின மக்களும் இணைந்து திமிங்கிலங்களை மீட்கப் போராடினர்.

அவற்றை மீண்டும் ஆழமான கடல் பகுதிக்கு அனுப்ப முயன்ற போதிலும், பாறைகளில் மோதியதால் ஏற்பட்ட பலத்த காயங்கள் மற்றும் உடலில் நீர்ச்சத்து வேகமாக குறைந்ததன் காரணமாகப் பெரும்பாலான திமிங்கிலங்கள் மூச்சடைத்து பரிதாபமாக உயிரிழந்தன.

உயிரிழந்த திமிங்கிலங்களுக்கு உள்ளூர் மாஓரி மக்கள் தங்கள் பாரம்பரிய வழக்கப்படி பிரார்த்தனைகளைச் செலுத்தி, கண்ணீருடன் அடக்கம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தக் கடற்கரைப் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிகழ்ந்த மிகப்பெரிய திமிங்கில உயிரிழப்பு இதுவெனக் கடல்சார் உயிரின ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles