மொஜ்தபா கமேனி நலமாக உள்ளார் – ஈரான் வெளியிட்ட காணொளி

ஈரானின் உயர்மட்டத் தலைவர் மொஜ்தபா கமேனியின் புதிய 12 விநாடி காணொளி ஒன்றை ஈரானின் மெஹர் (Mehr) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், இன்னும் சில நாட்களில் அவர் இறந்துவிடக்கூடும் என்றும் இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இவ்வாறு செய்திகள் வெளியாகியதை தொடர்ந்து ஈரான் ஊடகம் இந்த காணொளியை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் வெடித்ததிலிருந்து கமெனி ஒருமுறை கூட பொதுவெளியில் தோன்றவில்லை.

இந்த குறுகிய, காணொளியில் கமேனி தனது ஆலோசகர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகின்றமை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த காணொளியில் அவர் அமைதியாகவும் நல்ல உடல்நிலையுடனும் தோற்றமளிக்கிறார்.

இந்த காணொளியை பகிர்ந்த மெஹர் செய்தி நிறுவனம், உயர்மட்டத் தலைவரின் இத்தகைய காட்சிகள் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை என்று கூறியுள்ளது.

இந்த காணொளி எப்போது அல்லது எங்கு படமாக்கப்பட்டது என்பதை அந்த நிறுவனம் வெளிப்படுத்தவில்லை.

உச்சத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, மொஜ்தபா கமேனி இடம்பெற்று வெளியாகியுள்ள முதல் வீடியோ இதுவாகும்.

https://x.com/RT_com/status/2086198246121042165?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2086198246121042165%7Ctwgr%5E73ef6a7f2d3d402f2b6a0eee82b73e3e3993f09b%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.puthiyathalaimurai.com%2Fworld%2Fmojtaba-khamenei-health-rumors-new-video-emerges

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles