பிரேஸிலில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் உடல் கருகி நால்வர் பலி

பிரேஸிலின் ரியோ டி ஜெனிரோவில் நேற்று இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் 04 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் மூவர் கொலம்பிய சுற்றுலாப் பயணிகள் என பிரேசிலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மிகவும் அடர்ந்த தாவரங்களைக் கொண்ட மலைப்பகுதி காடான திஜூகா தேசிய பூங்காவில் ( Tijuca National Park) அந்த ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகியது.

இதில் விமானியும் மூன்று பெண்களும் “தீயில் கருகி உயிரிழந்ததாக தீயணைப்பு வீரர்கள் உறுதிப்படுத்தினர்.

மேலும், செங்குத்தான, எளிதில் சென்றடைய முடியாத ஒரு மலைப்பகுதியில் புகைந்துகொண்டிருக்கும் விமானத்தின் பாகங்களைக் காட்டும் படங்களையும் வெளியிட்டனர்.

உயிரிழந்தவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், பயணிகள் கொலம்பியப் பெண்கள் என்றும், அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles