கடந்த 7-8 ஆம் திகதிகளில் சூரியனில் நேரிட்ட காந்தப் புயல், பூமியை மிக வேகமாகத் தாக்கியதில் பல இடங்களில் பாதிப்புகள் உணரப்பட்டுள்ளன.
உலகின் சில பகுதிகளில் றேடியோ சிக்னல்கள் சிறிதுநேரம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
சூரியனில் சன்ஸ்பாட் 4549 பகுதியில் ஒக்ரோபர் 7ஆம் திகதி நேரிட்ட சூரிய காந்த புயல், 10ஆம் திகதி பூமியை தாக்கிய நிலையில், 8ஆம் திகதி உருவான இரண்டாவது காந்த புயல் நேற்று பூமியை தாக்கியிருக்கிறது.
7ஆம் திகதி உருவான சூரிய காந்த புயலைவிடவும், 8ஆம் திகதி உருவான காந்த புயல் பூமியை மிக விரைவாக வந்தடைந்ததாகவும் இதன் காரணமாக வட அமெரிக்க, ஐரோப்பிய பகுதிகளில் வானில் அரோரா எனப்படும் துருவ ஒளி தோன்றியதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதனை இந்தியாவிலிருந்து பார்க்க முடியவில்லை. எந்தப் பகுதியில் விழும், நேரம் போன்றவற்றை பொறுத்தே இதனைப் பார்க்க முடியும் என்று கூறப்பட்டது.
அரோரா பூமியை வந்தடைந்தபோது செயற்கைக்கோள் தொடர்புகள், மின் விநியோக கட்டமைப்புகளும் லேசான பாதிப்புக்கு உள்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சூரியனிலிருந்து 900 கி.மீ. வேகத்தில் இந்த சூரிய காந்த புயல் பூமி மீது மோதியதாகவும் எனினும் பூமிக்கு இதனால் பெரிய பாதிப்புகள் ஏதுவும் நேரிடவில்லை என்றாலும் தொடர்ந்து கண்காணிப்பில் விஞ்ஞானிகள் உள்ளனர்.
