சிங்கப்பூர் பொலிஸார், நேபாள வெள்ளத்தில் மாண்டவர்களை அடையாளங்காண உதவ அந்நாட்டுக்கு அதிகாரிகளை அனுப்பவுள்ளது.
நேபாளத்தின் கோரிக்கைக்கு இணங்க பொலிஸ் குழு அனுப்பப்படுவதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
பேரிடரில் மாண்டோரை அடையாளம் காண்பதில் நிபுணத்துவம் கொண்ட அதிகாரிகள் அதில் உள்ளனர்.
பொதுமக்களும் சிங்கப்பூர் ஆயுதப்படையும் வழங்கிய மனிதாபிமான உதவிப் பொருள்களும் நேப்பாளத்திற்கு அனுப்பப்படும்.
அரசாங்கம் ஏற்கனவே சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கத்திற்கு 100,000 டொலர் நிதி வழங்கியுள்ளது.
நேபாளத்திற்கு உதவ சங்கம் இதுவரை சுமார் ஒரு மில்லியன் வெள்ளி திரட்டியுள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 9 சிங்கப்பூரர்களைக் காணாமல் போயுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிங்கப்பூரர்களுக்கு உதவ ஏற்கனவே ஒரு குழுவை நேபாளத்திற்கு அனுப்பியுள்ளதாக அமைச்சு கூறியது.
சிங்கப்பூர் அரசாங்கம் மனிதாபிமான உதவி வழங்க நேபாள அரசாங்கத்துடன் தொடர்ந்து அணுக்கமாகச் செயல்படும் என்றும் அது குறிப்பிட்டது.
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நேபாள வெளியுறவு அமைச்சரைத் தொடர்புகொண்டு சிங்கப்பூரின் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.
