ஜார்க்கண்டில் வீதியில் கூடியிருந்தவர்கள் மீது லொறி மோதியில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு

ஜார்க்கண்டின் குந்தி மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த 18 சக்கர லொறி ஒன்று வீதியில் கூடியிருந்தவர்கள் மீது மோதியதில், மூன்று குழந்தைகள், மூன்று பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக குந்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரிஷப் கார்க் கூறுகையில்,

“குந்தியின் கார்ரா பகுதியில் ஸ்கூட்டர் ஓட்டுநர் ஒருவர் விபத்துக்குள்ளானதை அடுத்து அங்கு கூடியிருந்த மக்கள் மீது அதிவேகமாக வந்த லொறி மோதியுள்ளது. இதில், 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர்களில் மூன்று பேர் குழந்தைகள், மூவர் பெண்கள், ஒருவர் ஆண். மேலும் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.” என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் வியாழக்கிழமை இரவு கார்ரா – டோர்பா பிரதான சாலையில் நிகழ்ந்துள்ளது.

இந்தத் துயரச் சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles