டுபாய் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மசகு எண்ணெய் கப்பல் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
டுபாய் துறைமுகத்தின் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல் ஒன்றின் மீது ஈரான் நடத்திய டிரோன் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன் கப்பலின் கீழ்பகுதி சேதமடைந்து எண்ணெய் கசியும் அச்சமும் எழுந்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை ஈரான் திறக்காவிட்டால், எரிசக்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகளை தாக்குவோமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்த சில மணிநேரங்களிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
