ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்-2’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற ரஜினிகாந்த் நேற்று விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
‘ஜெயிலர்-2’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் 2 நாட்கள் உள்ளது. கமலுடன் நான் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட்டில் தொடங்குகிறது.
நடிகர் விஜய் காரை பின்தொடர்ந்து இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் சென்று விபத்தில் சிக்குவது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்து பேசிய ரஜினிகாந்த் –
நடிகர்கள் பின்னால் செல்ல வேண்டாம் ‘நடிகர்கள் பின்னால் சென்று கீழே விழுந்து காயப்பட்டால்இ அது உங்களுக்குத் தான் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். எனவேஇ இளைஞர்கள் தான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். படிக்கும் வயதில் படிப்பில் மட்டுமே முழு கவனம் செலுத்துங்கள். படிக்கும் நேரத்தை கோட்டை விட்டுவிட்டால்இ எதிர்காலத்தில் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட நேரிடும்.
முக்கியமாகஇ இளைஞர்கள் தங்கள் உடல்நலம்இ ஆரோக்கியத்தைப் பார்த்து கொள்ள வேண்டும். மதுஇ கஞ்சா என போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாதீர்கள். அதில் சென்றால் வாழ்க்கை கெட்டுப்போய்விடும். நீங்கள் மட்டுமின்றிஇ உங்கள் தாய்இ தந்தை என ஒட்டுமொத்த குடும்பத்தின் வாழ்க்கையும் நரகமாகிவிடும். அதுபோன்ற நண்பர்களின் அருகில்கூட சென்று விடாதீர்கள் என்று அவர் கூறினார்.
