நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகர்​கள் ரஜினி​காந்த் மற்றும் தனுஷ் ஆகியோரின் வீடு​களுக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது குறித்து பொலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

நடிகர்கள் ரஜினி​காந்த், தனுஷ் ஆகியோரது வீடு​கள் சென்னை போயஸ் கார்​டன் பகு​தி​யில் அமைந்துள்​ளன. இந்த​நிலை​யில், சென்னையில் உள்ள டிஜிபி அலு​வல​கத்​துக்கு மர்ம நபர் ஒரு​வரிட​ம் இருந்து நேற்று முன்​தினம் வெள்ளிக்கிழமைமின்​னஞ்​சல் ஒன்று வந்​தது.

அதில், ‘நடிகர்​கள் ரஜினி​காந்த் மற்​றும் தனுஷின் வீடு​களில் இன்னும் சற்று நேரத்​தில் குண்​டு​கள் வெடிக்​கும்’ என மிரட்​டல் விடுக்​கப்​பட்​டிருந்​தது.

இதையடுத்து, பொலீ​ஸார் விசா​ரணை மேற்கொண்டனர். அதில், வெடிகுண்டு மிரட்​டல் வெறும் புரளி என்​பது உறுதி செய்​யப்​பட்​டது. இதைத் தொடர்ந்​து, அந்த மின்​னஞ்​சலை அனுப்​பியது யார் என்​பதை கண்​டறி​யும் பணி​யில் சைபர் க்ரைம் பொலீ​ஸார் தீவிரமாக ஈடு​பட்​டுள்​ளனர்.

கடந்த சில மாதங்​களாக அரசியல் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட முக்​கியப் பிர​முகர்​களுக்கு இது​போன்ற மிரட்​டல்​கள் தொடர்ந்து வந்து கொண்​டிருந்​தன. சற்று ஓய்ந்​திருந்த நிலை​யில், தற்​போது மீண்​டும் மிரட்​டல்​கள் வரத் தொடங்​கி​யுள்​ளதால் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles