இந்தியா, சீனா மற்றும் பிற ஆசிய நாடுகளை பூமியின் நரகம் என்று தெரிவித்த அமெரிக்க அரசியல் விமர்சகர் மைக்கல் சாவேஜின் பதிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில், ‘இங்கே ஒரு குழந்தை பிறந்தவுடன் குடிமகனாகி விடுகிறதுஇ அதன் பிறகு அவர்கள் முழுக் குடும்பத்தையும் சீனா அல்லது இந்தியா அல்லது பூமியின் வேறு ஏதேனும் ஒரு நரகத்திலிருந்து இங்கே அழைத்து வருகிறார்கள். இதைப் பார்ப்பதற்கு நீங்கள் வெகுதூரம் செல்ல வேண்டிய அவசியமில்லை. இங்கே இப்போது ஆங்கிலம் பேசப்படுவதில்லை.’ – என்று குறிப்பிட்டிருந்தார்.
ட்ரம்பின் இந்தப் பதிவுக்கு இந்தியாவின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து அமெரிக்க ஜனாதிபதியுடன் பேச வேண்டும் கடும் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ‘நாங்கள் சில செய்திகளைப் பார்த்தோம்… அவ்வளவுதான் சொல்ல விரும்புகிறேன்’, என்று இந்த விடயம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார்.
