லெபனான் – இஸ்ரேல் போர் நிறுத்தம் 3 வாரங்களுக்கு நீடிப்பு

லெபனான் – இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில், அதனை மேலும் மூன்று வாரங்களுக்கு நீடித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது கடந்த தாக்குதலை தொடங்கியதை அடுத்து, ஈரான் ஆதரவுபெற்ற ஆயுதக் குழுவான லெபனானின் ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, ஈரானுக்கு எதிரான தாக்குதலை நடத்திக் கொண்டே லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்தது. இதில், ஹிஸ்புல்லா தலைவர்கள் பலர் உயிரிழந்ததோடு, லெபனான் பொருளாதார ரீதியாகவும் கடும் பின்னடைவைச் சந்தித்தது.

இந்நிலையில், லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த வாரம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதற்கான முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டது. அமெரிக்காவில் உள்ள லெபனான் மற்றும் இஸ்ரேல்
தூதர்கள் இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து இந்த போர் நிறுத்தம் ஏற்பட்டது.

இந்தப் போர் நிறுத்தம் கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்த நிலையில், அதனை மேலும் நீடிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வாஷிங்டனில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபீ, லெபனானுக்கான அமெரிக்க தூதர் மைக்கேல் இசா, அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதர் யெச்சியல் லீட்டர், அமெரிக்காவுக்கான லெபனான் தூதர் நாடா மோவாட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டொனால்ட் ட்ரம்ப்பின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், ‘போர் நிறுத்தம் மூன்று வார காலத்துக்கு நீட்டிக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் லெபனான் அதிபர் ஜோசப் அவுன் ஆகியோரை விரைவில் வெள்ளை மாளிகையில் வரவேற்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஹிஸ்புல்லாவிடம் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள லெபனானுக்கு உதவ அமெரிக்கா அதனுடன் இணைந்து செயல்படும்’ என தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles