அர்ச்சுனா எம்.பியுடன் முரண்பட்ட பெண் ஒருவயதுக் குழந்தையுடன் சிறையில்!

யாழ்ப்பாணத்தில் அர்ச்சுனா எம்.பி யுடன் முரண்பட்ட பெண்ணொருவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ள மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அத்துடன் குறித்த பெண்ணின் குழந்தையை அப்பெண்ணே வைத்திருக்கவும் மன்று அனுமதித்துள்ளது.

பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருக்கும், மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் காணி பிணக்கு ஒன்று நிலவி வரும் நிலையில், நேற்றைய தினம் குறித்த காணிக்குள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மற்றைய தரப்பினரும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

அந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியை காட்டி அவர்களை மிரட்டியமை தொடர்பிலான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தது.

அவ்வாறான நிலையில், தனது காணிக்குள் அத்துமீறி நுழைந்து, தன்னை அச்சுறுத்தினார் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நாடாளுமன்ற உறுப்பினருடன் முரண்பட்டவர்களில் பெண்ணொருவரை கைது செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

அதனை அடுத்து குறித்த பெண்ணை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது .

அதன்போது குறித்த பெண் ஒரு வயது குழந்தைக்கு தாய் எனவும், குழந்தைக்கு பாலூட்ட வேண்டிய தேவை உள்ளதாகவும் மன்றில் சுட்டிக்காட்டிய போது, குழந்தையை தாயுடன் இருக்க மன்று அனுமதித்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles