வெற்றிலைக்கேணியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6 பேர் கடற்படையால் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் சட்ட விரோதமான முறையில் உழவியந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்த ஒன்பது மீனவர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று வருகின்றன

இதன் அடிப்படையில் வெற்றிலைக்கேணி கடற்படை இன்று திங்கட்கி்ழமை மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் வெற்றிலைக்கேணி பகுதியில் சட்ட விரோதமான முறையில் உழவியந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்த ஒன்பது மீனவர்கள் இரண்டு உழவியந்திரத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்டவர்கள் உழவியந்திரம் மற்றும் ஏனைய மீன்பிடி உபகரணங்களுடன் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக யாழ் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles