யாழில் மனைவி மற்றும் அவரது சகோதரன் மீது கணவன் கத்தி குத்து!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் இன்றையதினம் கத்தி குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் அண்ணன் – தங்கை என இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

கணவன் மனைவியிடையே சாவகச்சேரி நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்றையதினம் வழக்குக்காக குறித்த பெண்ணும் அவரது சகோதரனும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலையாகிவிட்டு வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

அவர்கள் வீதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது திடீரென அவர்களை வீதியில் இழுத்து விழுத்திய கணவன், மனைவி மீதும் அவரது சகோதரன் மீதும் கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்டார்.

இதன்போது இருவரும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சந்தேகநபரான கணவனை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்ணை அவரது சகோதரனே தன்னிடமிருந்து பிரித்ததாக கூறியே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேகநபரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles