கனடாவின் ஒன்ராறியோவின் கிளாரிங்டன் அருகே ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வடக்கு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையிலஇ கன்செஷன் வீதி 3 இற்கு தெற்கே இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளானதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான ஒரு காரின் ஓட்டுநரான கிளாரிங்டன் குடியிருப்பாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்றைய வாகனத்தின் ஓட்டுநர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
விபத்துக்கான உடனடி காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. சமப்வம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
