கனடா மருத்துவமனையில் பரபரப்பு: நோயாளி மீது 76 குற்றச்சாட்டுகள் பதிவு

கனடாவின் நயாகரா பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில், நோயாளி ஒருவர் துப்பாக்கியுடன் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய சோதனையில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

செயின்ட் கேத்தரினஸில் உள்ள மரோட்டா ஃபேமிலி மருத்துவமனைக்கு நயாகரா பிராந்திய பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் துப்பாக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் விரைந்தனர். முதற்கட்ட சோதனையில், அவர் வைத்திருந்தது ஒரு போலி துப்பாக்கி என்பது தெரியவந்தது.

எனினும், அவரது நன்னடத்தை விதிகளின்படி அவர் ஆயுதங்கள் வைத்திருக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபரின் வீட்டில் மேலும் பல ஆயுதங்கள் இருப்பதாக பொலிசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

சோதனையிட பிடிவிராந்து அனுமதி பெற்று அவரது வீட்டை பொலிஸார் ஆய்வு செய்தபோது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. இரண்டு .22 கேலிபர் சுவிட்ச் துப்பாக்கிகள் (ஏற்றப்பட்ட நிலையில்) , ஒரு .22 கேலிபர் கைத்துப்பாக்கி (Loaded Handgun), 3 பிபி (BB) துப்பாக்கிகள் மற்றும் 3 போலி துப்பாக்கிகள், ஷாட்கன் பீப்பாய் மற்றும் பிற துப்பாக்கி பாகங்கள் , 12-கேஜ் ஷாட்கன் மேகசின் மற்றும் ஏராளமான தோட்டாக்கள் , தடை செய்யப்பட்ட பித்தளை கத்தி (Knuckle knife) போன்றவற்றை சந்தேக நபரிடமிருந்து மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஜேமி குவாதிப் மீது மொத்தம் 76 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது அவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் ஏதேனும் தெரிந்தால் பொதுமக்கள் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles