ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்காவிட்டால் ஜனாதிபதியை மாற்றும் போராட்டம் வெடிக்கும்!

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்படாவிட்டால், ஜனாதிபதியை மாற்றுவதற்கான அடுத்தகட்டப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று பலாங்கொடை கஸ்ஸப தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் இன்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாலேயே ஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை வழங்க முடியும். அரசமைப்பின் பிரகாரம் அதற்கான முழு அதிகாரமும் ஜனாதிபதிக்கே உள்ளது.

இந்த நடவடிக்கையை ஜனாதிபதி உடனடியாக முன்னெடுக்கத் தவறினால், நாட்டின் பௌத்த சக்திகளை ஒன்றுதிரட்டி இந்த அரசை விரட்டியடிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

ஜனாதிபதி தனது பொறுப்பை நிறைவேற்றாவிட்டால், பௌத்த சாசனத்தைப் பாதுகாக்கக்கூடிய, சிங்களத்தையும் பௌத்தத்தையும் மதிக்கக்கூடிய ஒருவரைச் சிங்கள பௌத்த இராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் ஜனாதிபதி ஆசனத்தில் அமர்த்த வேண்டிய நிலைமை உண்டாகும்.

ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குவதன் மூலமே இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும் வரை எமது போராட்டம் ஓயாது. ஞானசார தேரரின் விடுதலையே எமக்கு முதன்மையானது. அது நடைபெறாத பட்சத்திலேயே மாற்று வழியைத் தேர்ந்தெடுத்து, ஜனாதிபதியை மாற்றுவதற்கான போராட்டத்தைத் தீவிரமாக முன்னெடுப்போம்.” – என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles