ஏமனில் ஹவுதிகளின் தாக்குதல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73ஆக அதிகரிப்பு

ஏமனில் இராணுவ முகாம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. ஏமனின் உள்நாட்டு போரில் அரசு படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமனில் தலைநகர் சனா உள்ளிட்ட முக்கிய பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதனால், ஏடன் நகரை தற்காலிக நகராக கொண்டு ஏமன் அரசு செயல்பட்டு வருகிறது.

இந்த உள்நாட்டு போரில் அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி அரேபியா உள்ளது. இதனையடுத்து ஹவுதி மற்றும் சவுதி அரேபியா இடையே மோதல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஷப்வா என்ற தெற்கு மாகாண பகுதியில் ஏமன் அரசின் அல்-ஆலம் ராணுவ முகாம் உள்ளது. இது புதிய வீரர்களுக்கு பயிற்சி ராணுவத்தில் சேர்க்கும் முகாம் ஆகும்.

இந்த முகாம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள், 3 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 73 வீரர்கள் பலியானார்கள். 200 இற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

புதிய வீரர்கள் அணிவகுப்பில் நின்று கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ராணுவ வீரர்களின் மரணத்துக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஏமன் அரசு தெரிவித்தது.

உயிரிழந்தவர்களில் பலர் 18 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள். ராணுவ பயிற்சி முகாமில் புதிய வீரர்கள் தேர்வுக்காக வந்திருந்த அவர்கள் தாக்குதலுக்கு இலக்காகி பலியாகி உள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles