வவுனியா, தோணிக்கல் பகுதியில் இன்று இடம்பெற்ற ரயில் மோதியதில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை மாலை யாழில் இருந்து கொழும்புநோக்கி பயணித்த கடுகதி ரயில், தோணிக்கல் ஆலடி புகையிரதகடவையில் சென்றுகொண்டிருந்த போது குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் புகையிரதகடவையை கடக்கமுற்பட்ட முதியவரை ரயில் மோதியதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை கடந்தவாரம் வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் புகையிரதத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
