திருப்பதியில் நடிகை த்ரிஷா இன்று திங்கட்கிழமை அதிகாலை சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்.
நடிகை த்ரிஷா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், திருமலை ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவையில் ஈடுபட்டார்.
அப்போது, ‘இன்று ரிசல்ட் பக்காவா நம்ம பக்கம்தான்’ என்று ரசிகர் ஒருவர் த்ரிஷாவைப் பார்த்து கூறிய நிலையில், அவர் சிரித்த முகத்துடன் நடந்து சென்றார்.
