ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக் கோரி ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட விஜயின் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது.
பலம் வாய்ந்த தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகளை வென்று த.வெ.க. சாதனை படைத்த நிலையில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக்கோரி ஆளுநருக்கு த.வெ.க. சார்பில் மின்னஞ்சலில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இரு வாரங்களில் பெரும்பான்மையை நீரூபிக்கத் தயார் எனவும் அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
