ஜேர்மனியில் இருந்து 5000 துருப்புக்களை திரும்பப் பெற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அந்நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு தயாராகி வருகிறது.
பாதிக்கப்படும் படைப்பிரிவுகள் குறித்த விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், வில்செக்கின் ரோஸ் (Vilseck’s Rose) படைத்தளத்தில் நிலை கொண்டுள்ள துருப்புக்கள் வெளியேறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த படைத்தளம் அமைந்துள்ள பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள் வேலையிழப்பு பிரச்சினையை எதிர்கொள்வார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள மதுபான விடுதிகள், உணவகங்கள், பழுதுபார்க்கும் இடங்கள், பல்பொருள் அங்காடிகள் என அனைத்தும் இந்த துருப்புக்களை சார்ந்தே இயங்கி வருகின்ற நிலையில் தற்போதைய வெளியேற்றம் பல கடைகள் மூட வழிவகுக்கும் என்றும் அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.
