விளையாட்டில் தன்னை சேர்க்காத ஆத்திரத்தில் 14 வயதான சிறுவனையும் பெண் ஒருவரையும் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொன்றார்.
இந்தச் சம்பவம் நேற்று – மே 6ஆம் திகதி அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் கிராண்ட் ரேபிட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.
பாடசாலை அருகே மைதானத்தில் சிறுவர்களும் இளைஞர்களும் இணைந்து உதைபந்தாட்டம் ஆடினர். அங்குவந்த 18 வயது இளைஞர் ஒருவர் தன்னையும் விளையாட்டில் சேர்க்குமாறு கேட்டுள்ளார்.
ஆனால்,அங்கிருந்தவர்கள் அவரை விளையாட்டில் சேர்க்க மறுத்து விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் அவர்களுடன் முரண்பட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த 14 வயது சிறுவனை நோக்கிச் சுட்டுள்ளார். சிறுவன் சுடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பெண் ஒருவர் இளைஞரை தடுக்க முனைந்துள்ளார். அவரையும் அந்த இளைஞர் சுட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் சுடப்பட்ட இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது தொடர்பில் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் தப்பிச் சென்ற சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
