அவசர முடிவுகளை எடுக்க ஸ்டாலினுக்கு அதிகாரம்!

அவசர முடிவுகளை உடனடியாக எடுக்கும் அதிகாரத்தை தி. மு. க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று – மே 7ஆம் திகதி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தி. மு. க. கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அந்தத் தீர்மானத்தில்இ ‘நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத வகையில் முடிவுகள் வந்துள்ளது. இது நெருக்கடியானஇ சிக்கலான காலகட்டம் ஆகும். இன்னொரு தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராக இல்லாத நிலையில்இ தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே நமது முதன்மை நோக்கம்.

இதேவேளையில்இ திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்கு ஊறுவிளைவிக்கும் மதவாத சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது என்பது உள்ளிட்டவற்றையும் பரிசீலித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

கடந்த ஐந்தாண்டு காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் அப்படியே தொய்வின்றி தொடர்ந்தால்தான் தமிழ்நாடு அதே வேகத்தில் வளர்ச்சியைத் தக்க வைக்க முடியும் என்பதும் நமது விருப்பம்.

இத்தகைய சூழலில் உருவாகும் அரசியல்இ நிர்வாக நிலைமைகளை ஆராய்ந்து அவசர முடிவுகளை உடனடியாக எடுக்கும் அதிகாரத்தை ஸ்டாலினுக்கு வழங்குவது என இந்தக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது’ என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles