முதல்வர் பதவியை மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய மறுத்த நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவையை ஆளுநர் ஆர்.என்.ரவி கலைத்துள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் திகதி வெளியிடப்பட்டன. இதில் பா.ஜ.க. 207 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. திரிணமூல் காங்கிரஸுக்கு 80 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
இது தொடர்பாக மம்தா பானர்ஜி கடந்த 5ஆம் திகதி நிருபர்களிடம் கூறும்போது, ‘மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வி அடையவில்லை. எங்கள் வெற்றி களவாடப்பட்டது. முதல்வர் பதவியை நான் ராஜினாமா செய்யமாட்டேன்’ என்று தெரிவித்தார்.
இந்த சூழலில் ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவில், ‘மேற்குவங்க சட்டப்பேரவை மே 7ஆம் திகதியுடன் கலைக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
