சீனாவில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் வெய்ஃபெங்ஹே மற்றும் லி ஷாங்ஃபு ஆகியோருக்கு அந்நாட்டு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
மேற்குறித்த இருவரும் இலஞ்சம் வாங்கியமை மற்றும் வழங்கியமைக்காக தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
சீன அரசின் படி இரண்டு ஆண்டுகள் இடைக்கால தடை வழங்கி அவர்களின் நடத்தைகளை பொறுத்தவாறு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து வழங்கப்படும்.
மேலும் தற்போதைய தீர்ப்பில் இவர்களின் அரசியல் உரிமைகள் பறிக்க படுவதோடு, சொத்து சம்பந்தப்பட்ட அனைத்தையுமே பறிமுதல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் 2012 ஆண்டு பதவியேற்றது முதல் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இராணுவத்தில் நிலவும் அனைத்து விதமான ஊழலை கடுமையாக ஒழித்து வருகிறார்.
