மேற்கு ஆசிய மோதலுக்கு மத்தியில் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான அரசியல் பதற்றம் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், ஈரானிய தூதரகங்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் நையாண்டி செய்து காணொலிகளை வெளியிட்டு வருகின்றன.
சமீபத்திய டிஜிற்றல் நையாண்டியின் ஒரு வெளிப்பாடாக ஹங்கேரியில் உள்ள ஈரானிய தூதரகம் ட்ரம்ப் ஒரு வேடிக்கையான போராட்டத்தில் ஈடுபடுவதை காட்டும், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட ஒரு காணொலியை பகிர்ந்துள்ளது.
அதில், டொனால்ட் ட்ரம்ப் ஒரு சிறிய டெஸ்லா சைபர்-ட்ரக் போன்ற வாகனத்தை ஒரு குறுகலான பாதை வழியாக செலுத்த முயற்சித்து அதில் தோல்வியடைவதை சித்தரிக்கிறது.
34 செக்கன்கள் ஓடும் அந்தக் காணொலி ‘ஒஸ்டின் பவர்ஸ்: இன்ரர்நேஷனல் மான் (man) ஒவ் மிஸ்டரி’ திரைப்படத்தின் ஒரு புகழ்பெற்ற காட்சியை தழுவி உருவாக்கப்பட்டதாகும்.
தூதரகம் அந்தக் காணொலிக்கு ‘ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்ல ட்ரம்பின் முயற்சி!’ என்றும் தலைப்பிட்டுள்ளது.
