விஜய் ஆட்சி அமைத்தால் தமிழகத்துக்கே பேரழிவு” – டிடிவி தினகரன் காட்டம்

“முதல்வராகி ஊழலை ஒழிப்போம் என்று சொல்பவர்கள், முதல்வராகவே ஃபோர்ஜரி செய்கிறார்கள். ஒரு எம்எல்ஏ தானே என மிரட்ட நினைத்திருக்கலாம். குதிரை பேரம் செய்யவே இப்படி செய்திருக்கின்றனர்” என அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னையின் அவர் இன்று அடையாறில் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “காமராஜ் கையெழுத்திட்டதாக வெளியான வீடியோ எங்கு எடுக்கப்பட்டது? காமராஜ் கையெழுத்திடுவது போன்ற வீடியோவை எடுத்தது யார்? விஜய்யா, ஆனந்தா, செங்கோட்டையனா?

அந்த வீடியோ ஏஐ ஆக கூட இருக்கலாம். ஏஐ மூலம் என்ன வேண்டுமானாலும் உருவாக்கலாம். நகல் கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்தபோது, அசல் கடிதம் எங்கே என அவர் கேட்டிருக்கிறார். அதற்கு தவெகவினர் தருவதாக சொல்லிவிட்டு வந்துவிட்டனர். அது மோசடி வீடியோ என ஆளுநரிடம் கூறிவிட்டோம்.

முதல்வராகி ஊழலை ஒழிப்போம் என்று சொல்பவர்கள், முதல்வராகவே ஃபோர்ஜரி செய்கிறார்கள். தவெகவினர் என்னை மிரட்ட, பயமுறுத்தப் பார்க்கின்றனர். எனது ஒப்புதலுடன் கடிதம் கொடுக்கப்பட்டதாகக் கூறி குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கின்றனர். என்னை பயமுறுத்தலாம் என பார்க்கின்றனர். எவ்வளவோ நெருக்கடிகளைப் பார்த்தவன் நான். போலி ஆதரவு கடிதம் விவகாரத்தை சும்மா விடமாட்டேன்.

தீயசக்தி எல்லாம் தாண்டி தற்போது தவெக தமிழ்நாட்டுக்கு அழிவு சக்தியாக வந்து நிற்கிறது. தமிழ்நாட்டை அழிக்க வந்த சக்தி. ஆட்சிக்கு வரும் முன்பே திமிராக, அகங்காரமாக ஒரு எல்எல்ஏ தானே என மோசடி கடிதம் தருகிறார்கள்.

ஒரு எம்எல்ஏ தானே என மிரட்ட நினைத்திருக்கலாம். குதிரை பேரம் செய்யவே இப்படி செய்திருக்கின்றனர். விஜய் ஆட்சி அமைத்தால், அது தமிழகத்துக்கு பேரழிவை ஏற்படுத்தும். ஆட்சி அமைக்கவே இவ்வளவு ஃபோர்ஜரி வேலைகள் செய்கிறார்கள்” என்று தினகரன் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles