7ஆம் திகதி முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்!

நாளை மறுதினம் – அதாவது வரும் மே 7ஆம் திகதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

இதேசமயம், ஆட்சி அமைப்பதற்கு தேவையான அறுதிப் பெரும்பான்மையை இரு வாரங்களில் நிரூபிப்பதாக தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸவநாத் அர்லேகருக்கு விஜய் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

இதனிடையே, நாளைய தினம் தமிழ்நாடு ஆளுநரை சந்தித்து ஆட்சியமைப்பதற்கான உரிமையை விஜய் கோருவார் என்றும் தெரிய வருகிறது.

மேலும், முதல்வராக விஜய் பதவியேற்கும் நாளிலேயே அவரின் அமைச்சரவையும் பதவியேற்குமா அல்லது பிறிதொரு நாளில் அமையுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், திருப்பூர் சத்யபாமா, விஜயலட்சுமி ஆகியோருக்கு முக்கிய அமைச்சு துறைகள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles