ஜேர்மனியில் மக்கள்மீது காரால் மோதி தாக்குதல்: இருவர் பலி: பலர் காயம்!

ஜேர்மனியில் மக்கள் கூட்டத்தினிடையே செலுத்தப்பட்ட காரால் இருவர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்துள்ளனர். இதில், மூவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

ஜேர்மனியின் லீப்ஜிங் நகரில் நேற்று – மே 04ஆம் திகதி பிற்பகல்வேளை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் 33 வயதான ஜேர்மனி நாட்டுக்காரர் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தக் குற்றத்துக்கான காரணம் தொடர்பில் தெளிவான தகவல்கள் இல்லை. எனினும், கைதான சந்தேகநபர் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் என்றும் ஜேர்மனி பொலிஸார் தெரிவித்தனர்.

காரை மக்கள் கூட்டத்துக்குள் வேகமாக செலுத்தி மோதப்படும் சம்பவங்கள் அண்மைய ஆண்டுகளில் ஜேர்மனியில் அதிகரித்துள்ளன. 2024 டிசெம்பரில் மாக்டெபர்க்கில் நடந்த சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். 300இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதேபோன்று, கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் மியூனிச்சில் நடந்த சம்பவத்தில் 30 பேர் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles