கண் இமைக்கு மேல் வளர்ந்த பற்கள் – இந்தியாவில் பதிவான அதிர்ச்சி சம்பவம்

சிறுவனின் கண் இமைக்கு மேல் 2 பற்கள் வளர்ந்திருந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூயோர்க் போஸ்ட் இதழில் வெளியான கட்டுரை மூலம் இந்த அரிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அக்கட்டுரைப்படி, இந்தியாவைச் சேர்ந்த 16 வயது சிறுவனின் கண் இமைக்கு மேலே இவ்வாறு 2 பற்கள் வளர்ந்திருந்தன என அந்நாட்டு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்தியாவை சேர்ந்த 16 வயது சிறுவனுக்கு இடது கண்ணுக்கு மேலே வீக்கம் ஏற்பட்டுள்ளது. அது வலிக்கவில்லை என்பதால் ஆரம்பத்தில் அது ஒரு சாதாரண கட்டி என்று பெற்றோர் நினைத்துவிட்டனர்.

சில நாட்களுக்குள், கண் இமைக்கும் புருவத்திற்கும் இடையில் உள்ள தோலில் இருந்து இரண்டு கடினமான, வெள்ளை நிறக் கட்டிகள் வெளித் தெரிய தொடங்கியுள்ளன.

இந்த பற்கள் வெள்ளையாக எலும்பு போல தென்பட்டதால் மருத்துவரை அணுகியபோது, வாய்க்குள் வளர வேண்டிய பல் இடம்பெயர்ந்து அங்கு வளர்ந்தது தெரியவந்துள்ளது.

இதற்கமைய, மருத்துவர்கள், அவனுக்கு சி.டி ஸ்கேன் மற்றும் பிற சோதனைகளை செய்தனர். பின்னர் அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள், இது போன்ற சம்பவம் நடந்தது உலகிலேயே முதல்முறை என தெரிவித்துள்ளனர்.

மருத்துவ ரீதியாக, வாயை தவிர உடலின் மற்ற பகுதிகளில் வளரும் பல் ‘இடம்பெயர்ந்த பல்’ (ectopic tooth) என்று அழைக்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles