நெதர்லாந்து சொகுசுக் கப்பலில் 40 பேருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு

நெதர்​லாந்து சொகுசுக் கப்​பலில் பணி​யாற்​றிய 2 இந்தியர்கள் உட்பட 40 பேருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு கண்டறியப்​பட்டு உள்​ளது.

நெதர்​லாந்தைச் சேர்ந்த எம்​.​வி.ஹோண்​டியஸ் என்ற சொகுசுக் கப்​பல், கடந்த ஏப்​ரல் முதலாம் திகதி அர்​ஜென்​டி​னா​வின் உஷு​வாயா நகரில் இருந்து பயணத்தை தொடங்​கியது. இதில் 150 பயணி​கள் மற்​றும் மாலுமிகள் உட்பட 72 ஊழியர்​கள் இருந்​தனர். அண்​டார்​டிகா மற்​றும் தெற்கு அட்​லான்​டிக் பகு​தி​களின் தீவு​களுக்கு சொகுசு கப்​பல் பயணம் மேற்​கொண்​டது. புறப்​பட்ட சில நாட்களிலேயே 3 பயணிகள் ஹன்டா வைரஸ் பாதிப்​பால் உயிரிழந்​தனர்.

இதைத் தொடர்ந்து மேற்கு ஆப்​பிரிக்க கடற்​கரை பகு​தி​யில் முகாமிட்​டிருந்த சொகுசுக் கப்​பல் தற்​போது நெதர்​லாந்​தின் டெனெரிப் தீவுக்கு கொண்டு செல்​லப்​பட்டு உள்​ளது. அங்கு பயணி​களுக்கு மருத்​துவ பரிசோதனை​கள் நடத்​தப்​பட்​டன. ஹன்டா வைரஸ் பாதிப்பு இல்​லாத பயணி​கள் மட்​டும் அவர​வர் நாடு​களுக்கு திரும்​பிச் செல்ல அனு​ம​திக்​கப்​பட்​டது.

தற்​போதைய சூழலில் 2 இந்தியர்கள் உட்பட சுமார் 40 பேருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு கண்​டறியப்​பட்டு உள்​ளது. இவர்​கள் சொகுசுக் கப்​பலின் ஊழியர்​களாகப் பணி​யாற்றி வந்​தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. இதுகுறித்து இந்​திய சுகா​தா​ரத் துறை வட்​டாரங்​கள் கூறும்​போது, “எலிகள் மூலம் மனிதர்​களுக்கு ஹன்டா வைரஸ் பரவு​கிறது. குறிப்​பாக எலிக் கழி​வு​கள் படிந்த இடங்​களைச் சுத்​தம் செய்யும்போது மனிதர்​களுக்கு வைரஸ் பரவு​கிறது.

மேலும் எலிக் கழி​வு​களின் நுண்​துகள்​கள் காற்​றில் கலந்​து, அவற்றை சுவாசிப்​ப​தன் மூல​மும் ஹன்டா வைரஸ் தொற்று ஏற்படு​கிறது. இந்த வைரஸைக் குணப்​படுத்த மருந்​துகள் இல்​லை. எனினும் இது கரோனா வைரஸ் போன்று பரவ வாய்ப்​பில்​லை’’ என்றனர். மத்​திய அரசின் ஐசிஎம்​ஆர் இயக்​குநர் டாக்​டர் நவீன் குமார் கூறும்​போது, “ஹன்டா வைரஸால் இந்​தி​யா​வுக்கு அச்​சுறுத்​தல் இல்​லை. வெளி​நாட்டு சொகுசுக் கப்​பலில் 2 இந்​தி​யர்​கள் இந்த வைரஸால் பா​திக்​கப்​பட்​டிருப்​பது குறித்து அச்​சம் கொள்ள தேவை​யில்​லை’’ என்​று தெரிவித்​தார்​.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles