சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைந்து கைதுசெய்யப்பட்டு அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிலர், மீண்டும் சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைய முயற்சித்த போது மலேசிய குடிநுழைவுத் துறை அவர்களைக் கைது செய்துள்ளது.
நேற்றிரவு லுமூட் கடற்கரையில் சந்தேகத்திற்குரிய கும்பல் நடந்து சென்றதாகவும் அவர்களைத் தடுத்து சோதனையிட்ட போது இந்தோனேசியாவிலிருந்து சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைந்திருப்பது தெரியவந்துள்ளது.
9 ஆண்கள் 11 பெண்கள் என மொத்தம் 20 இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் 19 முதல் 59 வயதினர் என்றும் தெரிய வந்துள்ளது.
கைது; செய்யப்பட்டவர்களில் பலர் ஏற்கனவே கடந்த ஆண்டு மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த கும்பலைச் சட்டவிரோதமாக மலேசியாவுக்கு அனுப்பி வைத்த சிண்டிகேட் இந்தோனேசியாவின் Tanjung Balai பகுதியில் இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
