மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை த.வெ.க. தலைவரும் தமிழக முதல்வருமான
ஜோசப் விஜய் சந்திக்க இருக்கினறார் என தகவல் வெளியாகியுள்ளது.

17ஆவது சட்​டப்​பேர​வை​யின் முதல் கூட்​டம் இன்று திங்டக்கிழமை காலை தொடங்கியது. இதில், தற்​காலிக பேர​வைத் தலைவர் கருப்பையா முன்​னிலை​யில், முதல்​வர் ஜோசப் விஜய் உட்பட பேரவை​யின் புதிய உறுப்​பினர்​கள் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி​யேற்றனர்.

இந்த பதவியேற்பு முடிந்தபிறகு முக்கிய அரசியல் தலைவர்கள் பலரையும் முதல்வர் ஜோசப் விஜய் சந்திக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்து பெற இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரையும் அவர் சந்திக்க உள்ளார் என கூறப்படுகிறது.

முன்னதாக நேற்று முதல்வராக பதவியேற்ற கையோடு பெரியார் திடலுக்குச் சென்ற
ஜோசப் விஜய் அங்கு திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் தனது தேர்தல் பிரச்சாரங்களில் தி.மு.கவையும், ஸ்டாலினையும் எதிர்த்தே பேசி வந்த நிலையில், இந்த சந்திப்பு ஆரோக்கியமான அரசியலுக்கான முன்னெடுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles