பதவி விலகுமாறு இங்கிலாந்து பிரதமருக்கு உச்ச நெருக்கடி!

இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தொழிலாளர் கட்சி தலைமைப் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று அவரின் கட்சிக்குள்ளேயே நெருக்குதல் அதிகரித்துள்ளது.

ஸ்டார்மரை பதவி விலகுமாறு வலியுறுத்தி அவரின் அமைச்சரவையின் நான்கு அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர். இதேபோன்று, தொழிலளார் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 80 பாராளுமன்ற உறுப்பினர்களும் அவரை பதவி விலகுமாறு அல்லது விலகலுக்கான காலக்கெடுவை அறிவிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

எனினும், நூற்றுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தலைமைப் போட்டிக்கு நேரமல்ல’, என்று ஓர் அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர் என்று தெரிய வருகிறது.

நிலைமை இவ்வாறிருக்க இங்கிலாந்தின் பிரதமரான கியர் ஸ்டார்மர் தான் பதவியிலிருந்து ஒருபோதும் விலகப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

முன்னதாக, இங்கிலாந்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த மே 7ஆம் திகதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் றிபோர்ம் யூ.கே. என்ற புதிய கட்சி ஆதிக்கம் செலுத்தியது. ஆளும் கட்சியான தொழில் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துடன், மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதேபோன்று, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் தேசங்களிலும் தொழிலாளர் கட்சி பின்னடைவை சந்தித்தடுன் வேல்ஸில் ஆட்சியையும் இழந்தது. கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு பொறுப்பேற்று தலைமைப் பதவியை ஸ்டார்மர் துறக்க வேண்டும் என்று தொழிலாளர் கட்சி வலியுறுத்தி வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles