1. 44 கிராம் ஹெரோயினை உடைமையில் வைத்திருந்தவருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம்.
குற்றவாளி கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1. 44 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் தெல்லிப்பழையில் வைத்துக் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்றைய தினம் – அதாவது மே 13ஆம் திகதி நீதிபதி ஏ. ஜி. அலெக்ஸ்ராஜா தீர்ப்பு அளித்தார்.
இதன்படி, குற்றவாளிக்கு ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தமைக்காக ஏழு ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், மேலும் தண்டப்பணத்தை அவர் செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும்12 மாத கால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கை வழக்கு தொடுநர் தரப்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி கா. நசிகேதன் முன்னிலையாகியிருந்தார்.
