சைக்ளோஸ்போரா கயேடனென்சிஸ் ( Cyclospora cayetanensis) என்ற ஒட்டுண்ணித் தொற்றால் அமெரிக்காவின் 17 மாநிலங்களில் நூற்றுக்கண்காணவர்கள் பாதித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொற்றுகளால் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இறப்புகள் பதிவாகவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் அதிகபட்சமாக 31 முதல் 80 பேர் வரை இந்த ஒட்டுண்ணித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இல்லினாய்ஸ் மற்றும் டெக்சாஸ் மாநிலங்களில் தலா 11 முதல் 30 பேரும், மற்ற மாநிலங்களில் 1 முதல் 10 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள் எவரும் வெளிநாடு செல்லவில்லை எனத் தெரிவித்துள்ளனர். ஆகவே இந்த தொற்றுக்கள் அசுத்தமான உணவுகள் வழியே பரவியிருக்கக்கூடும் என சுகாதாரத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
மேலும் இந்த தொற்று ஏற்படும் பட்சத்தில் நீர்த்த வயிற்றுப்போக்கு, பசியின்மை, எடை இழப்பு, தசைப்பிடிப்பு, வயிறு உப்புசம், குமட்டல் மற்றும் சோர்வு ஆகியவை ஏற்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
