ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு – நகர மேயர் உயிரிழப்பு

வடகிழக்கு ஆப்கானிஸ்தானின் பதாக்ஷான் மாகாணத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில், மாகாண தலைநகர் ஃபைஸாபாத் நகர மேயர் ஹபீபுர் ரஹ்மான் மன்சூர் உயிரிழந்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை இரவு அவர் காரில் பயணித்துக்கொண்டிருந்தபோது குண்டுவெடிப்பு இடம்பெற்றதாக ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், இந்தத் தாக்குதல் தொடர்பான மேலதிக விபரங்களை உள்துறை அமைச்சு வெளியிடவில்லை.

இதனிடையே, சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் பதாக்ஷான் மாகாண தகவல் மற்றும் கலாசாரத் துறை பணிப்பாளர் ஜபிஹுல்லா அமிரி, ஃபைஸாபாத் நோக்கி பயணித்துக்கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிட்டதக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles