இந்தோனேசியாவில் சக்கி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவு

இந்தோனேசியாவில் இன்று சனிக்கிழமை அதிகாலையில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 49 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக என்.சி.எஸ். தனது ‘எக்ஸ்’ பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இந்தோனேசியாவின் வடமேற்கே எண்டே பகுதியில் இருந்து 68 கி.மீ தொலைவில் வடகடலோரத்தில் உள்ள புளோரெஸ் தீவில் இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 3.28 மணியளவில் பூமிக்கடியில் 10 கி.மீ ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆகப் பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதாக ஐரோப்பிய – மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள உயிா்ச் சேதமோ, பொருள் சேதங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles