மலேசியாவின் George Town பகுதியில் உள்ள Jalan Masjid Negeri அருகேயுள்ள உடினி சுரங்கப்பாதையில் இன்று காலை இடம்பெற்ற சாலை விபத்தில் மூன்று வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன.
இந்த விபத்தில் கொன்கிறீட் தூண்கள் ஏற்றிச் சென்றதாக நம்பப்படும் ஒரு லொறி, தொழிலாளர் வான் மற்றும் ஒரு கார் ஆகியவை தொடர்புடையதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்துக்குப் பிறகு வாகனங்களில் தீ பரவியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் தொடர்புடைய அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்பு அல்லது கடுமையான காயங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று கூறப்படுகிறது.
Jabatan Bomba dan Penyelamat Malaysia பினாங்கு மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் செயல்பாட்டு பிரிவு உதவி இயக்குநர் John Sagun Francis தெரிவித்ததாவது, காலை 7.04 மணியளவில் அவசர அழைப்பு பெறப்பட்டதாகக் கூறினார்.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தினர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசாரும், தீயணைப்பு துறையும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன.
