அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீன பயணத்தை நிறைவு செய்திருக்கும் நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் இரண்டுநாள் பயணமாக எதிர்வரும் 19ஆம் திகதி சீனா செல்லவிருப்பதாகக் கூறப்படுகின்றது.
ரஷ்ய – சீன உறவுகளைப் பலப்படுத்தவும், இருநாடுகளுக்குள்ளும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும் சீன ஜனாதிபதி ஜி ஜிங்பிங் உடன் விளாடிமீர் புடின் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மற்றும் உள்ளூர் விவகாரங்கள் குறித்து இருவரும் தங்களது கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவிருப்பதாகவும், சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முதல் முறையாக சீனா சென்று திரும்பிய நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் பயண செய்தி வெளியாகியிருக்கிறது.
