திங்கட்கிழமை தன்னை கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
“நான் கீழே விழுந்தது போர் வீரர்கள் நினைவிடத்திற்கு முன்னால். அங்கு விழுந்ததில் எனக்கு எந்த அவமானமும் இல்லை. ஆனால், இந்த அரசாங்கம் புலம்பெயர் அமைப்புகளின் காலடியில் விழுந்து கிடக்கிறது.
அப்படி விழுந்தால்தான் நாம் வெட்கப்பட வேண்டும். எனது அரசியல் வாழ்க்கையில் நான் ஒருபோதும் நாடகமாடியதில்லை. போர் வீரர்கள் நினைவிடம் என்பது ஒரு பொது இடம், அங்கு யார் வேண்டுமானாலும் சென்று அஞ்சலி செலுத்தலாம். அதைத் தடுக்க நினைப்பது சட்டத்துக்குப் புறம்பானது” என்றும் கூறியுள்ளார்.
