உயர்தரப் பரீட்சையில் 3 ஏ சித்திபெற்ற யாழ். இந்து கல்லூரி மாணவன் திடீர் மரணம்!

யாழ்ப்பாணம் இணுவில் தெற்குப் பகுதியைச் சேர்ந்த லவன் அக்சயன் எனும் மாணவன், உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவரான இவர், அண்மையில் வெளியான 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி, கணிதப் பிரிவில் 3 A சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 24 ஆவது இடத்தை இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்திருந்தார்.

பல்கலைக்கழகப் பிரவேசத்திற்காகக் காத்திருந்த வேளையில், இந்த இளம் சாதனையாளரின் உயிரிழப்பு அவரது குடும்பத்தினர், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles