சீனாவுடனான சிங்கப்பூர் உறவு தொடரும் – மூத்த அமைச்சர் லீ சியன் லூங்

சிங்கப்பூர் தொடர்ந்து சீனாவோடு உறவைக் கட்டிக்காக்க வேண்டும் என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறியிருக்கிறார்.

ஆனால் சிங்கப்பூரின் சொந்த நிபந்தனைகளின் அடிப்படையில் உறவு அமையவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் லீ சியன் லூங் சீனாவின் குவாங்சி வட்டாரம், ஷாங்ஹாய் நகரம் ஆகியவற்றுக்கு அவர் ஐந்து நாள் பயணம் மேற்கொண்டார்.

அமைச்சர் லீ, ஷங்ஹாய் மேயர் கொங் செங் வழங்கிய தேனீர் விருந்தில் நேற்று கலந்து கொண்டார்.

இரு தலைவர்களும் சூச்சாவ் தொழிலியல் பூங்கா பற்றிப் பேசினர். அந்தத் திட்டத்தின் வெற்றிக்கு இருநாட்டு நல்லுறவே முக்கிய காரணம் என்று லீ குறிப்பிட்டார்.

தேசிய அளவில் உறவைப் பலப்படுத்தும் அதே நேரத்தில் சீனாவின் பல்வேறு நகரங்கள், மாநிலங்களோடும் ஒத்துழைப்பைச் சிங்கப்பூர் தொடர்ந்து வலுப்படுத்தி வருவதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles