100 கோடி ரூபா வசூலித்த திரிஷ்யம் – 3 திரைப்படம்

நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் – 3 திரைப்படம் ரூ. 100 கோடி வசூலித்துள்ளது.

நடிகர் மோகன்லால் இயக்குநர் ஜீத்து ஜோசஃப் கூட்டணியில் உருவான திரிஷ்யம் திரைப்படத் தொடரின் மூன்றாம் பாகம் வியாழக்கிழமை வெளியானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும் விதமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இருப்பினும், இப்படத்திற்கான ஆர்வம் காரணமாக பெரியளவில் டிக்கெட் முன்பதிவுகள் நடைபெற்றன. இதனால், முதல்நாளிலேயே ரூ. 45 கோடி வரை வசூலித்தது.

இந்த நிலையில், ஆச்சரியப்படும் விதமாக 58 மணி நேரத்தில் இப்படம் ரூ. 100 கோடியை வசூலித்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்புரானைத் தொடர்ந்து மிக வேகமாக ரூ. 100 கோடி வசூலைப் பெற்ற படமாக திரிஷ்யம் – 3 மாறியுள்ளதால் இந்தாண்டின் அதிகம் வசூலித்த மலையாளப் படம் பட்டியலில் இடம்பிடிக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles