ரணிலின் பாதுகாப்பு அதிகாரியை தாக்கிய ஊடகவியலாளர் கைது!

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், தனியார் ஊடக நிறுவனமொன்றில் பணியாற்றும் ஒளிப்பதிவாளர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று வழங்கப்பட்ட அழைப்பாணையின் அடிப்படையில், ஒளிப்பதிவாளர் இன்று கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்திற்கு சட்டத்தரணி ஒருவருடன் சென்றுள்ளார். இதன்போதே அவர் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பான வழக்கு விசாரணை நேற்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்த ஊடகவியலாளர்கள் பதிவு செய்த காணொளியில், பொலிஸ் விசேட பிரமுகர் பாதுகாப்புப் பிரிவுடன் இணைந்திருந்த அதிகாரி ஒருவரை குறித்த ஒளிப்பதிவாளர் தனது கமராவால் தாக்குவது பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் காணொளி பின்னர் சமூக ஊடகங்களிலும் பரவியது.

இந்நிலையில், சம்பவத்தில் காயமடைந்த பாதுகாப்பு அதிகாரி நாரஹேன்பிட்டிய பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles