வவுனியா செக்கடிப்பிலவு பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
இன்று மாலை குறித்த இளைஞர் மைதானத்தில் நின்றிருந்த நிலையில் மழை பெய்துள்ளது. இதனையடுத்து அவர் ஒரு மரத்தின் கீழ் சென்று நின்றுள்ளார். அச்சமயம் அவர் மீது மின்னல் தாக்கியுள்ளது.
இதையடுத்து மீட்கப்பட்ட அவர், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் வவுனியா செக்கடிப்பிலவு பகுதியை சேர்ந்த 20 வயதான ஜோசப் அன்ரனி என்ற இளைஞரே பரிதாபமாக உயிரிழந்தவராவார்.
வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை கடும் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது.
